"vaazhdhal uyirkkannal aayizhai saadhal" Thirukkural 1124 - Meaning in English & Tamil Vilakkam
- மு.வரதராசனார் உரை: Kural Vilakkam
- மணக்குடவர் உரை: Kural Vilakkam
- பரிமேலழகர் உரை: Kural Vilakkam
- ஞா.தேவநேயப் பாவாணர் உரை: Kural Vilakkam
- சாலமன் பாப்பையா உரை: Kural Vilakkam
- கலைஞர் மு.கருணாநிதி உரை: Kural Vilakkam
- சிவயோகி சிவக்குமார் உரை: Kural Vilakkam
- புலியூர்க் கேசிகன் Kural Vilakkam
- Thirukkural in English - English Couplet
மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil
கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).
ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil
( பகற்குறிக்கட் புணர்ந்து நீங்குவான் சொல்வியது. ) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - ஆய்ந்தெடுத்த அணிகலன்களை யுடையாள் என்னோடு கூடுமிடத்து எனக்கு உயிருக்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும் ; நீங்கு மிடத்து அதற்குச் சாதல் அன்னள் - என்னை விட்டுப் பிரியுமிடத்து அதற்கு அதினின்று நீங்கிச் சாதல் போலும் . வாழ்தலின் இனியதும் சாதலின் இன்னாததும் இல்லையாதலின் , கூடுதல் வாழ்தலும் நீங்குதல் சாதலும் போல்வன என்றான் . கூடுமிடத்து என்பது எனக்கு என்பதும் அவாய்நிலையான் வந்தன , ' ஆயிழை ' அன்மொழித்தொகை .
சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.
சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil
வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள்.
புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil
இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்!
Thirukkural in English - English Couplet:
Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!.
ThirukKural English Meaning - Couplet -Translation:
My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.
ThiruKural Transliteration:
Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal
Adharkannal Neengum Itaththu.