Kural 1266

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

varukaman kon-kan oru-naal parukuvan
paidhalnhoi ellaam keda.

🌐 English Translation

English Couplet

O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.

Explanation

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

2 மணக்குடவர்

கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

(இதுவுமது) கொண்கன் ஒருநாள் வருக- நீண்டநாளாக வராத என்காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவாராக; பைதல் நோய் எல்லாம் கெடப் பருகுவன்- வந்தால், எனக்குத் துன்பஞ் செய்கின்ற இக்காம நோய் அடியோடு நீங்குமாறு; அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன். காதலர் வரின் இன்றுள்ள நோயும் இனிவரும் நோயும் ஒரே வேளையில் முற்றும் நீங்கிவிடும் என்பதாம். 'வருக', 'மன்' என்பவற்றிற்கு மேலுரைத்தவா றுரைக்க.

5 சாலமன் பாப்பையா

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

6 கலைஞர் மு.கருணாநிதி

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

7 சிவயோகி சிவக்குமார்

அவசியம் வருவார் அவதியுறச் செய்தவர் ஒருநாள். அன்று பருகுவேன் பிரிதலால் உண்டான நோய் எல்லாம் கெட.

8 புலியூர்க் கேசிகன்

என் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன்.

More Kurals from அவர்வயின்விதும்பல்

அதிகாரம் 127: Kurals 1261 - 1270

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature