Kural 1186

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vilakkatram paarkkum irulepoal kon-kan
muyakkatram paarkkum pasappu.

🌐 English Translation

English Couplet

As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.

Explanation

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

2 மணக்குடவர்

விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கின் அவிவு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இருளைப்போலவே; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு-தலைவரின் தழுவல் நெகிழ்வு பார்த்து உடனேவரக் காத்திருக்கும் இப்பசலை. காதலர் உடனிருந்து தழுவல் நெகிழினும் உடனே வரும் பசலை அவர் பிரிந்துதொலைவிற்குச் சென்றபின் வராதிருக்குமோ என்ற வாறாம். பார்த்தல் பார்த்துவருதல். கொண்டவன் கொள்-கொண்கு-கொண்கன். ஏகாராம் பிரிநிலை.

5 சாலமன் பாப்பையா

விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது.

7 சிவயோகி சிவக்குமார்

விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன் முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.

8 புலியூர்க் கேசிகன்

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

More Kurals from பசப்புறுபருவரல்

அதிகாரம் 119: Kurals 1181 - 1190

Related Topics

Because you're reading about Pallor of Love

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature