அதிகாரம் 73 : அவையஞ்சாமை | Avaiyanjaamai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 73 : அவையஞ்சாமை. List of 10 thirukurals from Avaiyanjaamai Adhikaram. Get the best meaning of 721-730 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 721 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பேச்சின் வகைகளை அறிந்த வல்லவர், பேச தயங்கமாட்டார். கூட்டத்தின் தேவை தெளிவாய் தெரிவதால்.
Kural 722 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.
Kural 723 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம். அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.
Kural 724 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கற்றவர்கள் முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.
Kural 725 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும். அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.
Kural 726 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.
Kural 727 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
போர்களத்தில் கேழையின் கூர்மையானவாள் எப்படி பயனற்றதோ அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.
Kural 728 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.
Kural 729 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள் கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.
Kural 730 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள், அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.
Chapter - ThiruKKural in English
Kural 721 Meaning in English
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
Kural 722 Meaning in English
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
Kural 723 Meaning in English
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
Kural 724 Meaning in English
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
Kural 725 Meaning in English
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
Kural 726 Meaning in English
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.
Kural 727 Meaning in English
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
Kural 728 Meaning in English
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
Kural 729 Meaning in English
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.
Kural 730 Meaning in English
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.