அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து | Katavul vaazhththu Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து. List of 10 thirukurals from Katavul vaazhththu Adhikaram. Get the best meaning of 1-10 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 1 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
Kural 2 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
Kural 3 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
Kural 4 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
Kural 5 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
Kural 6 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
Kural 7 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
Kural 8 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
Kural 9 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
Kural 10 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
The Praise of God Chapter - ThiruKKural in English
Kural 1 Meaning in English
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
Kural 2 Meaning in English
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?
Kural 3 Meaning in English
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds
Kural 4 Meaning in English
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
Kural 5 Meaning in English
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God
Kural 6 Meaning in English
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses
Kural 7 Meaning in English
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
Kural 8 Meaning in English
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue
Kural 9 Meaning in English
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation
Kural 10 Meaning in English
None can swim the great sea of births but those who are united to the feet of God