அதிகாரம் 42 : கேள்வி | Kelvi Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 42 : கேள்வி. List of 10 thirukurals from Kelvi Adhikaram. Get the best meaning of 411-420 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 411 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.
Kural 412 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.
Kural 413 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
Kural 414 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
Kural 415 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
Kural 416 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.
Kural 417 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
தவறாக உணர்ந்திருந்தாலும் அறியாமையை சொல்லமாட்டார்கள் கேள்வி அறிவாள் உணர்ந்தவர்கள்.
Kural 418 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கேட்கும் ஆற்றல் பெற்றிருப்பினும் கேளாத தன்மையுடையதே கேட்கவேண்டியதை கேட்காத செவி
Kural 419 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நுட்பமானதை கேட்டு அறியாதவர் பணிவானவராக இருத்தல் அரிது
Kural 420 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?.
Chapter - ThiruKKural in English
Kural 411 Meaning in English
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
Kural 412 Meaning in English
When there is no food for the ear, give a little also to the stomach.
Kural 413 Meaning in English
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.
Kural 414 Meaning in English
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.
Kural 415 Meaning in English
The words of the good are like a staff in a slippery place.
Kural 416 Meaning in English
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
Kural 417 Meaning in English
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
Kural 418 Meaning in English
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
Kural 419 Meaning in English
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
Kural 420 Meaning in English
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?.