அதிகாரம் 61 : மடியின்மை | Matiyinmai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 61 : மடியின்மை. List of 10 thirukurals from Matiyinmai Adhikaram. Get the best meaning of 601-610 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 601 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
Kural 602 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Kural 603 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
Kural 604 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
Kural 605 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.
Kural 606 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
Kural 607 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
Kural 608 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
Kural 609 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
Kural 610 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
Chapter - ThiruKKural in English
Kural 601 Meaning in English
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
Kural 602 Meaning in English
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
Kural 603 Meaning in English
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
Kural 604 Meaning in English
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
Kural 605 Meaning in English
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
Kural 606 Meaning in English
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
Kural 607 Meaning in English
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
Kural 608 Meaning in English
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
Kural 609 Meaning in English
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
Kural 610 Meaning in English
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.