அதிகாரம் 12 : நடுவு நிலைமை | Natuvu nilaimai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 12 : நடுவு நிலைமை. List of 10 thirukurals from Natuvu nilaimai Adhikaram. Get the best meaning of 111-120 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 111 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.
Kural 112 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
Kural 113 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
Kural 114 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
Kural 115 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.
Kural 116 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.
Kural 117 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
Kural 118 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
Kural 119 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
Kural 120 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
Chapter - ThiruKKural in English
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
Kural 111 Meaning in English
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
Kural 112 Meaning in English
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
Kural 113 Meaning in English
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
Kural 114 Meaning in English
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.
Kural 115 Meaning in English
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
Kural 116 Meaning in English
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish.".
Kural 117 Meaning in English
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
Kural 118 Meaning in English
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.
Kural 119 Meaning in English
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.
Kural 120 Meaning in English
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.