அதிகாரம் 60 : ஊக்கமுடைமை | Ookkamutaimai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 60 : ஊக்கமுடைமை. List of 10 thirukurals from Ookkamutaimai Adhikaram. Get the best meaning of 591-600 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 591 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
Kural 592 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
Kural 593 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
Kural 594 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
Kural 595 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.
Kural 596 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
Kural 597 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
Kural 598 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.
Kural 599 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.
Kural 600 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
Chapter - ThiruKKural in English
Kural 591 Meaning in English
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.
Kural 592 Meaning in English
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
Kural 593 Meaning in English
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property".
Kural 594 Meaning in English
Wealth will find its own way to the man of unfailing energy.
Kural 595 Meaning in English
The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
Kural 596 Meaning in English
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
Kural 597 Meaning in English
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
Kural 598 Meaning in English
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
Kural 599 Meaning in English
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
Kural 600 Meaning in English
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.