அதிகாரம் 59 : ஒற்றாடல் | Otraatal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 59 : ஒற்றாடல். List of 10 thirukurals from Otraatal Adhikaram. Get the best meaning of 581-590 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 581 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
நடப்புகளை அறிவதும், விளக்கம் தரும் நூல்களும் என இரண்டும் சிறந்த ஆட்சியாளருக்கு கண் போன்றது.
Kural 582 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படியெல்லாம் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை எல்லா வகையிலும் சரியாக அறித்திருப்பது ஆடசியாளர்களின் தொழில்.
Kural 583 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
ஆய்ந்து அறிபவரை அறிந்து நடப்புகளை தெரிந்துக் கொள்ளா ஆட்சியாளரின் வெற்றி நிலைத்த வெற்றியாய் இருக்காது.
Kural 584 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
செயல்படுபவர், தனக்கு உறவு முறைக் கொண்டவர், வேண்டதகாதவர் என்று பாகுபாடு அற்று அனைவரையும் ஆராய்வதே ஒற்று.
Kural 585 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்டுக்கொள்ள முடியாத உருவமுடன், எதைக்கண்டும் அஞ்சமல், எந்நிலையிலும் உள்ளதை சொல்லாமல், வல்லமையுடன் செயல்படுவதே ஒற்று.
Kural 586 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
Kural 587 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
Kural 588 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
Kural 589 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
Kural 590 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.
Chapter - ThiruKKural in English
Kural 581 Meaning in English
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.
Kural 582 Meaning in English
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
Kural 583 Meaning in English
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
Kural 584 Meaning in English
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.
Kural 585 Meaning in English
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).
Kural 586 Meaning in English
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.
Kural 587 Meaning in English
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
Kural 588 Meaning in English
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
Kural 589 Meaning in English
Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.
Kural 590 Meaning in English
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.