அதிகாரம் 14 : ஒழுக்கமுடைமை | Ozhukkamutaimai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 14 : ஒழுக்கமுடைமை. List of 10 thirukurals from Ozhukkamutaimai Adhikaram. Get the best meaning of 131-140 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 131 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
Kural 132 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
Kural 133 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
Kural 134 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
Kural 135 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
Kural 136 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
Kural 137 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
Kural 138 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
Kural 139 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
Kural 140 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
Chapter - ThiruKKural in English
Kural 131 Meaning in English
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
Kural 132 Meaning in English
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
Kural 133 Meaning in English
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.
Kural 134 Meaning in English
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.
Kural 135 Meaning in English
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
Kural 136 Meaning in English
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
Kural 137 Meaning in English
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
Kural 138 Meaning in English
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
Kural 139 Meaning in English
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
Kural 140 Meaning in English
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.