அதிகாரம் 85 : புல்லறிவாண்மை | Pullarivaanmai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 85 : புல்லறிவாண்மை. List of 10 thirukurals from Pullarivaanmai Adhikaram. Get the best meaning of 841-850 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 841 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது.
Kural 842 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அறிவு இல்லாதவர் மனம் விரும்பி கொடுப்பதற்கு காரணம் பெறுபவரின் தவத்தன்மையே அன்றி வேறு ஒரு காரணம் இல்லை.
Kural 843 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அறிவு இல்லாதவர் தங்களுக்கு தாங்களே பெரிதாக ஏற்படுத்திக் கொள்ளும் துன்பம் போல் அவர்களது பகைவருக்கும் செய்வது அரிது.
Kural 844 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கூர்ந்த மதியின்மை எனப்படுவது என்ன என்றால் நுட்ப அறிவு உடையவன் நான் என்ற மதி மயக்கமே.
Kural 845 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கல்லாமலேயே ஒன்றை நடைமுறை செய்வதால், குற்றம் இல்லாமல் கற்றதையும் ஐயப்படச் செய்துவிடும்.
Kural 846 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அழிவை மறைப்பதே அற்பத்தனம், தனது குற்றம் மறையாமல் இருப்பதற்கும் இதுவே வழி.
Kural 847 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
அரிய கருத்துக்களை விட்டோழித்த அறிவற்றவன் செயல் தனக்குத் தானே பெரிய துன்பத்தை ஏற்படுத்தும்.
Kural 848 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கீழ்படிதலும் இல்லாமல், சுய சிந்தையும் இல்லாமல் இருப்பவருக்கு உயிர் என்பது வாழ்நாள் வரை கிடைத்த நோய்.
Kural 849 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
கண்டு உணராமலேயே இப்படி என்று விளக்கிக் காட்டுவான் ஆனால் தான் கண்டு உணர முற்படமாட்டான். கண்டு உணரமுடியாதவன் உணர்வது தன்னால் கண்டு உணரும் அளவிற்கே.
Kural 850 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:
உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான்.
Chapter - ThiruKKural in English
Kural 841 Meaning in English
The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such.
Kural 842 Meaning in English
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).
Kural 843 Meaning in English
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.
Kural 844 Meaning in English
What is called want of wisdom is the vanity which says, "We are wise".
Kural 845 Meaning in English
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
Kural 846 Meaning in English
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
Kural 847 Meaning in English
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself.
Kural 848 Meaning in English
The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body).
Kural 849 Meaning in English
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
Kural 850 Meaning in English
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.