அதிகாரம் 19 : புறங்கூறாமை | Purangooraamai Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 19 : புறங்கூறாமை. List of 10 thirukurals from Purangooraamai Adhikaram. Get the best meaning of 181-190 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 181 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.
Kural 182 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
Kural 183 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
Kural 184 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.
Kural 185 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
Kural 186 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.
Kural 187 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
Kural 188 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?.
Kural 189 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
Kural 190 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.
Chapter - ThiruKKural in English
Kural 181 Meaning in English
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite".
Kural 182 Meaning in English
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
Kural 183 Meaning in English
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
Kural 184 Meaning in English
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
Kural 185 Meaning in English
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
Kural 186 Meaning in English
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
Kural 187 Meaning in English
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
Kural 188 Meaning in English
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?.
Kural 189 Meaning in English
The world through charity supports the weight of those who reproach others observing their absence.
Kural 190 Meaning in English
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.