அதிகாரம் 9 : விருந்தோம்பல் | Virundhompal Adhikaram - Tamil Meaning
அதிகாரம் 9 : விருந்தோம்பல். List of 10 thirukurals from Virundhompal Adhikaram. Get the best meaning of 81-90 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.
Kural 81 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
Kural 82 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
Kural 83 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
Kural 84 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
Kural 85 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
Kural 86 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.
Kural 87 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
Kural 88 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
Kural 89 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
Kural 90 Villakkam - கலைஞர் மு.கருணாநிதி உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
Chapter - ThiruKKural in English
Kural 81 Meaning in English
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
Kural 82 Meaning in English
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
Kural 83 Meaning in English
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
Kural 84 Meaning in English
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
Kural 85 Meaning in English
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?.
Kural 86 Meaning in English
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
Kural 87 Meaning in English
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
Kural 88 Meaning in English
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support.".
Kural 89 Meaning in English
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupid.
Kural 90 Meaning in English
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.