இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
Transliteration
inpaththuL inpam payakkum ikalennum
thunpaththuL thunpanG ketin.
🌐 English Translation
English Couplet
Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.
Explanation
If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
2 மணக்குடவர்
இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.
3 பரிமேலழகர்
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்- மாறுபாடு என்று சொல்லப்படும் தலையாய துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்- அவ்வில்லாமை அவனுக்குத் தலையாய இன்பத்தை விளைக்கும். 'துன்பத்துள் துன்பம்' எல்லார்க்கும் பொல்லாதவனாய் எங்கும் எப்போதும் துன்புறுதல். 'இன்பத்துள் இன்பம்' எல்லார்க்கும் நல்லவனாய் எங்கும் எப்போதும் இன்புறுதல்.
5 சாலமன் பாப்பையா
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
இன்பமும் மேலும் இன்பமும் உண்டாகும் துன்பமும் மேலும் துன்பமும் உண்டாக்கும் பகையுணர்வு என்ற இகல் அழிந்தால்.
8 புலியூர்க் கேசிகன்
‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.
More Kurals from இகல்
அதிகாரம் 86: Kurals 851 - 860
Related Topics
Because you're reading about Enmity & Strife