Kural 866

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kaaNaach chinaththaan kazhiperunG kaamaththaan
paeNaamai paeNap padum.

🌐 English Translation

English Couplet

Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

Explanation

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

2 மணக்குடவர்

மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும். இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.

3 பரிமேலழகர்

காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

காணாச் சினத்தான்-செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் கேதுவான கடுஞ் சினத்தனாகவும்; கழிபெருங் காமத்தான்-கரை கடந்த பெண்ணாசையனாகவும் இருப்பவனது; பேணாமை பேணப்படும்-பகைமை விரும்பிக் கொள்ளப்படும். காணாச் சினத்தாற் கண்ணன்ன கேளிரையும் மாபெரு வலியரையும் பகைத்துக் கொள்ளுதலாலும், கழிபெருங் காமத்தாற் பெண்ணின் வாயிலாக எளிதாய்க் கொல்லப்படுதலாலும், இவ்விரு குணங்களையுமுடையான் தானே தன் அழிவைத் தேடிக் கொள்ளுதல் பற்றிப் ’பேணாமை பேணப்படும்’ என்றார். ’காணா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

5 சாலமன் பாப்பையா

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

7 சிவயோகி சிவக்குமார்

கண்டு அறியாமல் வெறுப்படைபவன், அழிவன மேல் அளவற்ற ஆசைகொள்பவன் எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும்.

8 புலியூர்க் கேசிகன்

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

More Kurals from பகைமாட்சி

அதிகாரம் 87: Kurals 861 - 870

Related Topics

Because you're reading about Greatness of Enmity

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature